தாடியுள்ள பார்ட்னர் இருந்தால் அப்போ கண்டிப்பாக இந்த நோய் உங்களுக்கு இருக்கும்! உண்மையை தெரிஞ்சுக்கோங்க..
பொதுவாக சில பெண்களுக்கு சரும பிரச்சினை இருக்கும். இவ்வாறு வரும் போது இது எதனால் வருகின்றது என சிலர் ஆராய்ந்து பார்ப்பார்கள்.
கொழுப்பு சார்ந்த உணவுகள் அதிகம் சாப்பிடுதல், உடல் சூடு என உள்ளக காரணங்கள் பல இருந்தாலும் வெளிப்புற விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் தன் துணை தாடி வைத்திருந்தால் அநேகமான பெண்கள் அதனை விரும்புவார்கள்.
இவர்கள் உங்கள் கண்ணங்களை உரசும் போது அது காலப்போக்கில் ரேஷஸ் மற்றும் முகப்பரு ஆகிய பிரச்சினைகளை உருவாக்கலாம்.
இது தொடர்பில் மருத்துவரொருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதில், “ பொதுவாக பெண்களின் முகம் மிகவும் மென்மையானவையாக இருக்கும். இதனுடன் ஆண்களின் தாடி உரசும் போது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதுடன், இதனால் முகப்பரு அல்லது வடுக்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.” என கூறியுள்ளார்.
அந்த வகையில் தாடியுடன் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி குறைக்கலாம் என்பது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தாடி வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
1. ஹைஜீன்
முதலில் ஆண்கள் தங்களின் தாடிகளை ஹைஜீனிக்காக பராமரிக்க வேண்டும். தினமும் க்ளென்சரை பயன்படுத்தி தாடியை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் பெண்களின் முகத்தில் ரேஸ் மற்றும் முகப்பருக்கள் வரும்.
2. ஈரப்பதம்
ஆண்களின் தாடி எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதனை வரட்சியாக வைத்து கொள்ளக் கூடாது. இவ்வாறு வைப்பதால் அரிப்பு, மற்றும் எரிச்சலை குறைத்து பாதிப்புகளை தடுக்கும். மேலும் வரட்சியாக தான் காணப்படுகின்றது என்றால் ஆண்கள் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தலாம்.
3. டிரிம்மிங் மற்றும் ஷேப்பிங்
ஆண்களுக்கு பொதுவாக தாடி இருந்தால் அதனால் அவர்களுக்கும் தேவையற்ற வகையில் ரேஸ்கள் வர ஆரம்பிக்கும். இதனால் தாடியை டிரிம்மிங் மற்றும் ஷேப்பிங் செய்து கொள்ளலாம்.
4. கெமிக்கல் பேஸ்டு புராடக்ட்களை தவிர்க்கவும்
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கெமிக்கல்ஸ் உள்ள க்ரூமிங் அதிகம் உள்ள பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் தன்மைகயை இது இல்லாமாக்கும். இதனால் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.