Facebook பாதுகாப்பாக இருக்கணுமா? Profile Luck கட்டாயம் பண்ணிடுங்க
முகநூலில் Profile Lock வசதியை எப்படி பயன்படுத்தி, பாதுகாப்பாக முகநூலை வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமானதாகும்.
தற்போது முகநூல் போன்ற பிரபலமான தளங்களில் Profile Lock என்ற வசதி பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி வருகின்றது.
இதன் மூலம் நமது பதிவுகள், புகைப்படங்கள் இவையனைத்தும் நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் கட்டுப்படுத்தப் படுகின்றது.
தற்போது Profile Lock என்ற ஆப்ஷனை நாம் செயல்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Profile Lock
உங்களது ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனத்தில் முகநூல் செயலியை திறந்து உள்ளே நுழையவும்.
அதில் Profile படத்தை அல்லது Menu என்பதை க்ளிக் செய்து உங்கள் பெயரை தெரிவு செய்து Profile பக்கத்திற்கு செல்லவும்.
அதில் ஸ்டோரியில் சேர்க்கவும் என்ற பொத்தனுக்கு அடுத்த மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து Profile அமைப்பு மெனுவை திறந்து, Profile Lock என்பதை தெரிவு செய்யவும்.
ப்ரொஃபைல் லாக்கின் அம்சங்களை விளக்கும் ஒரு திரை தோன்றும். "உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்யவும்" என்பதை தட்டி அம்சத்தை செயல்படுத்தவும்.
இதுவே லேப்டாப்பில் Profile Lock மெனுவிற்கு சென்ற பின்பு ஒரு ப்ராம்ப்ட் தோன்றும். அதில் உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்யவும் என்பதை க்ளிக் செய்து அம்சத்தை செயல்படுத்தலாம்.
நன்மைகள் என்ன?
இவ்வாறு Profile Lock செய்வதன் மூலம் அந்நியர்கள் நமது தனிப்பட்ட புகைப்படத்தை அணுகுவதை தடுக்க முடியும்.
நமது Profile மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரிஸ் மற்றும் புதிய பதிவுகளை நண்பர்கள் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கும்.
தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அனுமதியின்றி பகிர்வதை குறைக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தெரியாத நபர்களிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன என்பதை அறிவது பாதுகாப்பு மற்றும் மன அமைதியை அளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |