என்னை மன்னிச்சிடுங்க! 11,000 பேரை வேலையை விட்டு தூக்கிய மார்க்
Meta நிறுவனம் 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Meta நிறுவனத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் உள்ளன.
நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க, புகைப்படங்களை பகிர 19 வயதில் மார்க் ஸக்கர்பெர்க் பேஸ்புக்கை உருவாக்கினார், நாளடைவில் உலகமே கொண்டாடும் சமூகவலைத்தளமானது.
நாளுக்கு நாள் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அபார வளர்ச்சியடைந்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமையும் வாங்கியது.
இவைகளுக்கு தாய் நிறுவனமாக செயல்பட்டு வரும் Metaவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், நேற்று சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
Metaவின் 18 கால ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது இதுவே முதன்முறையாகும்.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் விளம்பரம் மூலம் வரும் வருவாயில் இழப்பு ஏற்பட்டதே இந்த முடிவுக்கு காரணம்.
இதற்கு முன்னதாக சில நடவடிக்கைகளின் மூலம் வருவாய் இழப்பை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பலனில்லாமல் போனதால் மார்க் ஸக்கர்பெர்க் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மின் வணிகம் மற்றும் ஒன்லைனில் அதிகம் நேரம் செலவிட்டதாக வருவாய் அதிகரித்தது.
இதனால் முதலீடு செய்வது என முடிவெடுத்தேன், துரதிஷ்டவசமாக நான் நினைத்தது தவறான ஒன்றாக மாறியது.
இந்த முடிவுக்கு நானே பொறுப்பேற்கிறேன், இது கடினமானது என எனக்கு தெரியும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.