உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்... அதிர்ச்சியில் பயனர்கள்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒன்றரை மணி நேரமாக முடங்கிய நிலையில், தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.
முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செவ்வாய் இரவு திடீரென முடங்கின.
இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத காரணத்தினால் பயனர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
மெட்டா நிறுவனத்தில் இரு சமூக ஊடங்களிலும் இப்படியொரு பிரச்சினையால் விரக்தியும் அடைந்துள்ளனர். மற்றொரு புறம் நெட்டிசன்கள் தங்களது பாணியில் மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 8.33 மணியிலிருந்து சேவை தடைபட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இதன் சேவை முடங்கியுள்ளது.
செயல்பட தொடங்கிய சமூக வலைதளங்கள்
சுமார் 2 மணி நேரம் முடங்கிய இரண்டு சமூக வலைத்தளங்களும் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டும் முடங்கியதற்கான காரணம் என்ன என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |