கற்றாழை - தேன் இருந்தால் போதும்.. முகம் பளபளப்பாகிவிடும்..!
பெரும்பாலான பெண்கள் முகத்தின் அழகை அதிகரிப்பதற்கு இன்று பல வகையான கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அதிகமான பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு ஆயிரக்கணக்காக செலவு செய்து கிரீம் வாங்கி பயன்படுத்தினாலும், சரியான மாற்றம் கிடைக்காமல் ஏமாந்து தான் போகின்றனர்.
அழகை பாதுகாக்கும் தேன் கற்றாழை
இந்நிலையில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு தேன் மற்றும் கற்றாழை இருந்தால் மட்டும் போதுமாம். ஆம் இவற்றினை வைத்து எவ்வாறு கிரீம் தயாரிப்பது என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரை வைத்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் செய்து வந்தால், முகம் பளபளப்பாக மாறுவதுடன், எண்ணைப் பிசுக்கு எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழிக்கும் பலரும் இந்த முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பளபளப்பாக முகம் மாறுவதுடன், அழகும் அதிகரிக்கும்.