புதிய கூட்டணியில் சாந்தனு- பகத் பாசில்! வைரல் கிளிக்ஸ்
பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியும், ஷாந்தனு - கீக்கி விஜய் ஜோடியும் ஒன்றாக சேர்ந்து தங்களது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா போல் மலையாளத்தில் சிறந்த நடிகர் தான் பகத் பாசில்.
இவர் தற்போது, கோலிவுட், டோலிவுட் என மற்ற திரையுலகிலும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் விக்ரம், மாமன்னன், புஷ்பா ஆகிய திரைபடங்கள் சூப்பர் டுப்பர் ஹீட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து சினிமாவில் சாதித்த பகத் பாசில் கடந்த 2014-ம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு ஜோடிக்கும் திருமண நாளா?
இந்த நிலையில் நஸ்ரியா - பகத் பாசில் ஜோடி தங்களுடைய 9-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.
அப்போது நடிகர் சாந்தனு - அவரது மனைவி கீக்கி விஜய் ஆகியோருடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள். நடிகர் சாந்தனு கடந்த 2015-ம் ஆண்டு பிரபல தொகுப்பாளினியான கீக்கி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் நஸ்ரியா - பகத் பாசில் ஜோடிக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் திருமண நாளை இணைந்து சிறப்பித்துள்ளார்கள்.
இவர்கள் இணைந்து கேக் வெட்டிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீக்கி புகைப்படங்களை நெட்டிசன்களுடன் இணைந்து வைரலாக்கி வருகிறார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்துடன் இணைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |