படாதபாடு பட்டும் கருவளையம் போகவில்லையா? இரண்டே நாட்களில் போக சூப்பர் டிப்ஸ்
பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் கண் கருவளையமும் ஒன்று.
இது முக அழகைக் கெடுப்பது மட்டுமல்ல கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் தோற்றம் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
காரணங்கள்
- தூக்கமின்மை
- அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்கள்
- மனஉளைச்சலில் பாதிக்கப்பட்டவர்கள்
- புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு
- போதியளவு நீர் அருந்தாமை
- ஊட்டச்சத்துக் குறைப்பாடு
- உணவுப் பழக்கவழக்கங்கள்
- முகங்களுக்கு ஒவ்வாத அழகுசாதனப்பொருட்கள்
போன்ற காரணங்களால் கண்களுக்கு கீழ் கருமையான திட்டுக்கள் தோன்றி கருவளையம் அதிகரிக்கும்.
உணவுகள்
கருவளையம் உள்ளவர்கள் இந்த உணவு வகைகளை முறையே உண்டு வந்தால் வருவளையம் நீங்கும்.
ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, காட்டு சீரகம், சீஸ் இவை அத்தனையும் கருவளையங்களை நீக்கும் சக்தி கொண்டவை.
தீர்வு
உருளைக்கிழங்கை நன்கு அரைத்த சாற்றை ஒரு மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் தக்காளி சாறு சேர்த்து கண்களுக்கு கீழே நன்கு மசாஜ் செய்துக் கொள்ள வேண்டும்.
20 நிமிடம் நன்கு ஊற விட்டு ஒரு கொட்டன் துணி கொண்டு துடைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்வதால் உங்கள் கண்களில் இருக்கும் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டு போகும்.
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டார்ச்களை நறுக்கியவுடனேயே கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மில்லி லிற்றர் எலுமிச்சைச் சாறும் சேர்த்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
திக்கான டீ பைகளை கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய் அல்லது விட்டமின் ஈ எண்ணெய்க் கொண்டு தினமும் மசாஜ் செய்வதால் வருட கணக்கில் இருக்கும் கருவளையம் இல்லாமலே போகும்.