கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையத்தை மேக்கப் போட்டு மறைக்க வேண்டாம்! நிரந்தரமாக போக்க இந்த இயற்கை பொருள் போதும்!
கருவளையமானது ஓய்வின்மையால் பலருக்கு ஏற்படுகின்றது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இதற்கு இயற்கை முறை மூலம் உடனடி தீர்வு பெற முடியும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி தீர்க்கலாம் என பார்ப்போம்.
வெள்ளைத் தாமரை வெள்ளைத் தாமரை இலையுடன், 10 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை கலந்து, கண்களைச் சுற்றித் தேய்த்து, 10 நிமிடம் கழித்து கழுவிவிட, கோலிக்குண்டாகக் கண்கள் மிளிரும். க்ரீன் டீ க்ரீன் டீ பையினை, அரை டம்ளர் தண்ணீரில் ஊறவிடவும்.
இதிலிருந்து கிடைக்கும் திக்கான டிக்காஸனுடன், 2 டீஸ்பூன் சர்க்கரை கலக்கவும். ஒரு மென்மையான காட்டன் துணியை இதில் நனைத்து, கண்களின் மேலே போட்டு, 10 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும். இதுபோல தினமும் செய்துவர, கண்கள் பிரகாசமாக இருக்கும். விட்டமின் ஈ கேப்சூஸ் விட்டமின் ஈ கேப்சூலை வாங்கி, அதில் உள்ள எண்ணெய்யுடன் சம அளவில் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
இதை, மோதிர விரலில் தொட்டு மெதுவாகக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால், கருவளையம் நீங்கும். அதிமதுர பொடி 4 டீஸ்பூன் அதிமதுர பொடியுடன், 3 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 3 சொட்டு தேன் கலந்து கண்களைச் சுற்றி பேக் செய்துகொள்ளவும். அரை மணி நேரம் கழித்து கண்களைக் கழுவ, கருமை நீங்குவதுடன். கண்கள் அழகால் மிளிரும்.
அவகேடோ பழம் அவகேடோ பழத்தின் சதைப் பகுதி, வாழைப்பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்துகொள்ளவும். இத்துடன், 2 சொட்டு கேரட் ஆயில் சேர்த்து, கண்களைச் சுற்றி பேக் போட்டுக்கொள்ளவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ, இமைகள் பிரகாசமாக இருக்கும்.
விளக்கெண்ணெய்
10 சொட்டு அவகேடோ ஆயிலுடன், 10 சொட்டு கேரட் ஆயில், 10 சொட்டு விளக்கெண்ணெய், 10 சொட்டு கிளிசரின் கலக்கவும்.
ஒரு சுத்தமான துணியை இதில் நனைத்து, கண்களின் மீது போட்டு அரை மணி நேரம் ஓய்வு எடுக்கவும். பிறகு, குளிர்ந்த நீரால் கண்களை கழுவ, பிரைட்டாக இருக்கும்.
எலுமிச்சை இலை
எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் சாதம் வடித்த கஞ்சி, கிளிசரின், விளக்கெண்ணெய், தேன் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, கண்களில் தேய்த்து மசாஜ் செய்தால், கண்கள் பொலிவுடன் இருக்கும்.