கடும் வெப்பத்தால் காரின் அவலநிலையை பாருங்க! புலம்பும் கார் உரிமையாளர்
கடும் வெப்பம் காரணமாக காரின் முன்பக்க பம்பர் உருகியுள்ளா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் கொடுமையால் காரின் அவலநிலை
கோடை வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதிப்படும் நிலையில், தற்போது வாகனத்தின் நிலையும் பரிதாபமாகியுள்ளது.
ஆம் நாட்டின் வலிமையான எஸ்யுவி கார்களில் ஒன்றாகக் கருதப்படும் டாடா ஹாரியரின் முன்பக்க பம்பர் கடும் வெயிலின் காரணமாக உருக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கார் உரிமையாளர் சவுரவ் நஹாடா தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், “ 2021ம் ஆண்டு முதல் குறித்த காரை ஓட்டி வரும் நான், காரின் நல்ல மதிப்புரையை வைத்து தான் இதனை வாங்கினேன்.
தற்போது எனது காரை பெங்களூரில் தனது அலுவலகத்தின் முன்பு 10 மணி நேரம் நிறுத்திவிட்டு, பின்பு காரை எடுக்க வந்தேன்... அப்போது சூரிய ஒளியினால், முன்பகுதி பம்பர் உருகுவதை அவதானித்ததாக கூறியுள்ளார். மேலும் குறித்த சேதத்திற்கு நஷ்ட ஈடும் கேட்டு வருகின்றார்.
ஆனால் டாடா நிறுவனம் குறித்த பிரச்சினையை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.