நடிகை சாந்தினி அளித்த புகார்: அமைச்சர் மணிகண்டனை கைது செய்த இடைகால தடை
பிரபல நடிகை கொடுத்த வன்கொடுமை புகாரில், அமைச்சர் மணிகண்டனை வரும் 9ம் தேதி வரை கைதுசெய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முழு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ஐந்தாண்டுகள் வாழ்ந்ததாகவும், மூன்று முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டினை வைத்தார்.
அதற்கான ஆதாரங்கள் ஆபாச சில புகைப்படங்களையும் சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்களையும் வைத்துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, சாந்தினி மீது புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கோரிய மனு குறித்த விசாரணையும் ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.