தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்கும் ஈஸி டிப்ஸ்.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக உடம்பிலுள்ள கொழுப்பை கரைக்க வேண்டும் என்றால் அதற்கு பல கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அத்துடன் அதிகமான கொழுப்பால் அவதிப்படுபவர்கள் HIIT (High Intensity Interval Training) என அழைக்கபடும் பயிற்சியை மேற் கொண்டால் ஒரே மாதத்தில் கொழுப்பை கரைக்கலாம் என கூறப்படுகின்றது.
“ HIIT ” என அழைக்கப்படுவது மிகக் கடுமையான பயிற்சியை ஓரிரு நிமிடங்களுக்கு செய்து, பின்னர் ஓரிரு நொடிகள் இடைவெளி விட்டு, மீண்டும் மிகக் கடுமையான பயிற்சியாகும்.
Image - healthline
அந்த வகையில் அதிகமான கொழுப்பு கொண்டவர்கள் HIIT பயிற்சி செய்வதன் மூலம் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
HIIT பயிற்சியின் நன்மைகள்
1. HIIT முறையில் பயிற்சிகள் செய்யும் போது இதயத்துடிப்பு மற்றும் மெட்டபாலிச அளவுகள் உயர்வாக இருக்கும்.
2. பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகமாக இருக்கும். இந்த செயன்முறை நாம் அதிகமான ஆக்சிஜனை உள்வாங்குவதால் ஏற்படுகின்றது.
3. அதிக நேரம் செலவு செய்து பயிற்சி செய்ய முடியாதவர்கள் இந்த முறையில் உடற்பயிற்சி செய்யலாம். நேரம் மிச்சப்படுத்தப்படும். அத்துடன் பிஸியாக இருக்கும் நபர்கள் இது போன்ற செய்வதால் அவர்களின் வேலைகளும் பாதுகாக்கப்படும்.
Image - forbes
4. தசைகளின் அடர்த்தி (muscle mass) இந்த பயிற்சி முறை மூலமாக பாதுகாக்கப்படும் என கூறப்படுகின்றது. அதே வேளை நாம் தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சிகளால் தசைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
5. சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் ரோப் பயிற்சி, வேகமான ஓட்ட பயிற்சி, எடை தூக்குதல் ஆகிய பயிற்சிகள் இதற்கு பதிலாக செய்யலாம். அதுவே சாதாரண பயிற்சி முறைகளை செய்யும்போது தசை அடர்த்தி பாதிக்கப்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |