முடி வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
உடற்பயிற்சி செய்வதனால் உடல் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால், உடற்பயிற்சி செய்வதனால் முடி வளரும் என்பது பலருக்கு தெரியாத விடயம். சரி இனி உடற்பயிற்சி செய்வது முடி வளர்வதில் என்னவிதமான பங்களிப்பை மேற்கொள்கிறது எனப் பார்ப்போம்.
image - styles at life
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்கவல்லது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு மன அழுத்தம் நீங்கும் பட்சத்தில் என்டார்ஃபைன்ஸ் என்ற அமிலங்கள் சுரக்கும்.
இதனால் மன அழுத்தத்தால் ஏற்படும் முடி உதிர்வு குறையும்.
இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது
உடற்பயிற்சி செய்தல் நமது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது முடி வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
image - Be bidywise
ஆரோக்கிய உணவுகள்
விட்டமின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் முடிக்கு மிகவும் நல்லது.