வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லதா? குழப்பத்திற்கு பதில் இதோ
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பலரும் தங்களது உடல் எடையைக் குறைப்பதற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
நடைபயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது வெறும் வயிற்றில் மேற்கொள்ளலாமா என்ற கேள்வி பலருக்கும் எழும். இதுகுறித்து விரிவாகவே தெரிந்து கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் நடைபயிற்சி
காலை உணவிற்கு முன்பு வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் தேக்கமுள்ள கொழுப்பை எரிக்க உதவுகின்றது.
மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடை குறைப்பை துரிதப்படுத்தவும் செய்கின்றது. மன தெளிவையும் அதிகரித்து, உற்சாகமாக புதிய நாளை தொடங்க வழிவகுக்கின்றது.
உணவிற்கு பின்பு நடைபயிற்சி மேற்கொண்டால் செரிமானம் மேம்படுவதுடன், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதுடன், உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்க முடியும்.
கலோரிகளை எரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் செய்கின்றது. ஆதலால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொண்டால், உணவிற்கு பின்பு மேற்கொண்டாலும் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும்.
அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்புவோர் காலியான வயிற்றில் நடைப்பயிற்சி செய்யலாம். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், உங்கள் உடல்நிலை, பழக்கவழக்கம், உணவுமுறை ஆகியவற்றைப் பொருத்து, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |