கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் எளிதாக மாற்றுவது எப்படி?
பலரும், பயணங்களிலோ, பொது போக்குவரத்தில் பயணிக்கும்போதோ, சில சிதைந்த நோட்டுகள் நம்மிடம் வந்து சேரும். அதை மாற்ற முடியாமல் திணறி வருவோம்.
இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் இந்த நோட்டை மாற்றுவதில் சிக்கல் எழுகிறது. ஆனால், அந்த நோட்டுகளை மாற்ற நாம் அச்சப்பட தேவையில்லை.
நோட்டை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிகள் மறுக்க கூடாது?
ரிசர்வ் வங்கியின் விதியின்படி, எந்த வங்கியிலிருந்தும், சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றி விடலாம். அப்படி அவர்கள் வாங்க மறுத்தால், அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேப்போல், நோட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் மதிப்பு குறையும்.
நோட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் மதிப்பு குறையும்.
கொரோனா பரவல் வேகமெடுக்குமா? ஐ.சி.எம்.ஆர் பகீர் தகவல்
சிதைந்த நோட்டுகளில் தெரிய வேண்டியது
முதலில், ஒரு வாடிக்கையாளர் சிதைந்த ரூபாய் நோட்டை வங்கிக்கு எடுத்துச் சென்றால், அந்த நோட்டில், காந்திஜியின் படம், ஆர்பிஐ கவர்னரின் கையெழுத்து, வாட்டர்மார்க் மற்றும் வரிசை எண் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை வங்கி முதலில் சரிபார்க்கிறது.
அனைத்தும் இருந்தால், இதற்குப் பிறகு, நோட்டை மாற்ற வங்கி மறுக்க முடியாது. அடுத்து, உங்களிடம் 20-க்கும் மேற்பட்ட கிழிந்த நோட்டுகள் இருந்து, அவற்றின் மதிப்பு 5000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
துண்டாக கிழிந்த நோட்டு
பலரிடமும் நோட்டுகள் துண்டாக கிழிந்து வைத்திருப்பது உண்டு. அப்படி கிழ்ந்திருந்தாலும், அவற்றை மாற்ற முடியும்.
இதற்கு இந்த ரூபாய் நோட்டின் துண்டுகளை அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்ப வேண்டும்.
இத்தோடு, இந்த ரூபாய் நோட்டின் துண்டுகளை அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்ப வேண்டும்.