தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க... உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க
தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாழை
செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
தினமும் புதிதாக தொடங்கும் நாளில் வெறும்வயிற்றில் செவ்வாழை பழம் சாப்பிட்டால், அன்றைய தினம் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும்.
இதில் உள்ள இயற்கையான சர்க்கரை உடனடியான ஆற்றலை கொடுப்பதுடன், இதில் எண்ணற்ற சத்துக்களும் அடங்கியிருக்கின்றது.
சத்துக்கள் என்ன?
செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
25 சதவீதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ள நிலையில், இதனை சாப்பிடுவதால் சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவை நீங்குகிறது.
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை போக்குவதுடன், இதிலுள்ள சர்க்கரை உடலுக்கு உடனடியான ஆற்றலையும் கொடுக்கின்றது.
வெறும் வயிற்றில் ஏன் சாப்பிட வேண்டும்?
செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குடல் செயல்பாட்டிற்கு உதவுவதுடன், வயிறு சம்பந்தமான பிரச்சனையை தடுக்கின்றது.
மஞ்சள் வாழைப்பழத்தை விட, செவ்வாழைப்பழம் உயர்ந்த அளவு பொட்டாசியம் மற்றும் மாங்கனீயம் கொண்டுள்ளதால், இவை ரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைத்து இதய நோய் அபாயத்தை தடுக்கின்றது.
காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன், நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்க உதவுகின்றது. அன்றைய நாளை செயல்திறன் மிகுந்ததாக மாற்றவும் உதவுகின்றது.
செவ்வாழைப்பழம் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, திடீர் பசி ஏற்படாமல் தடுக்கும். இதன் மூலம் மிதமான உணவுப் பழக்கத்தை உருவாக்கி, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மஞ்சள் வாழைப்பழத்தில் அமிலத்தன்மை அதிகம் என்பதால் இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |