மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டால் இவ்வளவு நன்மையா?
மாலை நேர உடற்பயிற்சியின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடற்பயிற்சி
பொதுவாக உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்குமாம்.
மேலும் உடல் எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், செரிமான பிரச்சனை என எந்தவொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டாம்.
உடல் மற்றும் மனம் இரண்டும் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாலை நேர உடற்பயிற்சி
மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மனம் தளர்ந்து இரவில் நன்றாக தூங்க உதவும். மேலும் காலையில் எழும்போது புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
காலையை விட மாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருப்பதுடன், உங்களால் சிறப்பாக உடற்பயிற்சி செய்யவும் முடியும்.
மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனம் அமைதியடைவதுடன், உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.
நாள் முழுவதும் செய்த வேலையின் மன அழுத்தத்தினைப் போக்க மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும்.
தினமும் மாலை உடற்பயிற்சி மேற்கொள்வதால் எலும்புகள் வலுவாக இருக்குமாம்.
மாலை நேர உடற்பயிற்சி மன அழுத்தத்தை நீக்குவதுடன், மூளையில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துமாம்.
ஆனால் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு சுமார் 2 மணி நேரம் முன்பு எதையும் சாப்பிட வேண்டாம். மேலும் உடற்பயிற்சி செய்த பின்பு உடனே தூங்கவும் செல்லக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |