எதிர்நீச்சலில் ஏற்பட்ட சொதப்பல்... இந்த தவறை கவனிச்சீங்களா?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மறைவிற்கு பின்பு பல சொதப்பல்கள் அரங்கேறி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சொதப்பல் என்ன?
தற்போது சீரியலில் குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருப்பது போன்று காட்டப்பட்டு வருகின்றது. மற்றொரு புறம் அவர் கதிர் மற்றும் ஞானம் இருவரிடமும் ஜீவானந்தத்தையும், அப்பத்தாவையும் கோவில் திருவிழாவிற்கு அழைத்து வந்து கொலை செய்யுமாறு அண்ணன் என்ற குரல் கூறியுள்ளது.
நந்தினி, ஈஸ்வரி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் செய்து வந்த வேலையும் வீட்டிற்கு தெரிந்த நிலையில், ஒட்டுமொத்தமாக மறுபடியும் வீட்டிற்குள் அடைபடும் நிலைக்கு குடும்ப பெண்கள் இருக்கின்றனர்.
இதனிடையே ஜீவானந்தத்தின் பெண் ஈஸ்வரியிடம் வந்து நிற்கவே, கதில் அந்த குழந்தையை தெரியாது என்று கூறி சத்தம் போடுகின்றார். ஆனால் சீரியலில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்யும் போது அந்த குழந்தை அங்கு தானே இருந்தது.... அப்போது கதிர் அந்த குழந்தையை பார்த்துவிட்டார்.. தற்போது ஏன் புதிதாக பார்ப்பது போன்று பேசுகின்றார் என்று அடுத்தடுத்து கேள்விகள் எழுந்துள்ளது.
ஜீவானந்தம் பெண் தான் வெண்பா என்ற உண்மை தெரியும்போது என்ன மாதிரி ரியாக்ஷன் நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |