மகள் முறை பெண்ணை மனைவியாக்கிய வேல ராமமூர்த்தி.. அவரே கூறிய அதிர்ச்சி உண்மை
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி, தனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
நடிகர் வேல ராமமூர்த்தி
நடிகர் வேல ராமமூர்த்தி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரான நடித்து வருகின்றார. இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். குற்றப்பரம்பரை, குறுதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.
எழுத்தாளராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி வருகின்றார். குறிப்பாக கிராமத்து வில்லன் கதாபாத்திரத்த்திற்கு கச்சிதமாக பொருந்துபவர் ஆவார்.
மதயானை கூட்டம் படம் மூலம் வில்லனாக அறிமுகமான இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரான நடித்த மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரது கதாபாத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
மகள் முறை பெண்ணை திருமணம் செய்தாரா?
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வேல ராமமூர்த்தி, தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவரிடம் நீங்கள் காதல் திருமணம் செய்து கொண்டீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்கு அவர் பதிலளிக்கையில் “இல்லை, சொந்தத்துல தான் திருமணம் பண்ணேன். சொந்த மதினி மகளை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
எங்க இதுல அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்க. அவங்க எனக்கு மகள் முறை வரும். எங்க ஆளுங்கள்ல மட்டும் அந்த மாதிரி கட்டுவோம்” என கூறியுள்ளது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |