டிஆர்பி-யில் அதள பாதாளத்திற்கு சென்ற எதிர்நீச்சல்... கடைசி அஸ்திரத்தை எடுத்த அப்பத்தா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசியத்தை அதிகரிக்க இறுதியாக அப்பத்தாவின் சொத்தை கையில் எடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
குணசேகரனாக வேல ராமமூர்த்தி களமிறங்கி 4 நாட்கள் கலக்கிய நிலையில், வேறொரு படப்பிடிப்பிற்காக சென்றதால், சீரியலின் கதையை மாற்றி கொண்டு செல்கின்றனர்.
அப்பத்தாவின் சொத்து
இந்நிலையில் புதிய வில்லனாக ஆர்ஜே நெலுவை நடிக்க வைத்து சுவாரசியத்தை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அப்பத்தாவின் சொத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
அப்பத்தாவின் 40 சதவீத சொத்து யாருக்கு செல்ல இருக்கின்றது இன்னும் சில தினங்களில் தெரியும் என்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தை குறித்த கோவில் திருவிழாவின் போது கொலை செய்யவும், அது அண்ணனுக்கு பரிசளிக்கவும் வேண்டும் என்று தம்பிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் என்ன நடக்க இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |