தர்ஷாவுக்கு தெரியவரும் உண்மை.. குந்தகையை தள்ளி வைக்கும் சக்தி- இனி நடக்கப்போவது என்ன?
“என்னுடைய குடும்ப விடயத்தில் யாரும் தலையிட வேண்டாம்..” என அறிவுக்கரசி வாயை சக்தி மூடியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.
அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
குந்தகையிடம் விலகும் சக்தி
இந்த நிலையில் குணசேகரன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கியதை தம்பதியாக சக்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஜனனியை எதிர்த்து குணசேகரனை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
தற்போது குணசேகரன் வீட்டுக்குள் இருப்பதால் மருமகள்கள் அனைவரும் வெளியில் இருக்கிறார்கள். அவர்களால் பிள்ளைகளை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்கையில், சக்தியுடன் குந்தகை என்ற பெண்ணொருவர் நெருக்கமாக பழகுகிறார். இதற்கு குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் துணையாக இருக்கிறார்கள். இருந்தாலும் சக்திக்கு ஜனனியை மறந்து விட்டு வாழ முடியவில்லை. இதனால் அந்த பெண்ணிடம் எப்போதும் ஒரு இடைவேளையில் இருக்கிறார்.
இதனை அறிந்து கொண்ட குந்தகை, “உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பக்கத்தில் நெருங்கமாட்டேன்..” என்பது போல் பேசுகிறார்.
ஈஸ்வரியிடம் பேச சென்ற தர்ஷாவுக்கு தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பது என்னவென்று புரியவந்துள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |