மீண்டும் வீட்டிற்கு வரும் குணசேகரன்- திக்குமுக்காடி நிற்கும் மருமகள்கள்- சக்தி ஆதரவு தருவது ஏன்?
விடுதலையான குணசேகரனிடம் கதிர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதனை சக்தி தெட்ட தெளிவாக கூறி விடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.
அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
சக்தியின் ஆதரவு ஏன்?
குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும் என சக்தி எல்லா வேலைகளையும் பார்த்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், குணசேகரனின் சூழ்ச்சியில் சிக்கிய சக்தி வீட்டில் நிம்மதி இல்லாமல் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் புலம்பி கொண்டிருக்கிறார்.. அதற்கு ரேணுகா சக்தியிடம், ” சக்தி உனக்கு என்ன ஆச்சு என கேட்க, அதற்கு சக்தி, ”எனக்கு என்ன ஆச்சு, என்ன ஆகப்போகுது எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் நீங்க அமைதியா இருங்க” என்று கோவமாக கத்துகிறான்.
சக்தியின் இந்த மாற்றம் ஜனனி உட்பட வீட்டிலுள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோயிலில் மனமுடைந்து அமர்ந்திருந்த குணசேகரன்
இதற்கிடையில், கோவிலில் மனம் உடைந்து இருக்கும் குணசேகரனை சக்தி பார்க்கிறான். அப்போது சக்தி குணசேகரனிடம், ” நீங்க வீட்டுக்கு கிளம்பி வாங்க பாத்துக்கலாம்” என்று கூற அதற்கு குணசேகரன்,“நீ பேசி ஒரு முடிவு எடுத்துட்டு வா நான் அதுவரைக்கும் இங்கே இருக்கேன்..” என்று கூறுகிறான்.
இதனை தொடர்ந்து கோவமாக வீட்டுக்கு வந்த சக்தி ஜனனியிடம், ”அன்னைக்கு என்ன வச்சிக்கிட்டு தானே சாருபாலா மேடம் தான் இன்ஸ்பெக்டரா வர வச்சி அண்ணன கிளப்பி விட்டாங்க..” என்று கூறினான்.
இதனை கேட்ட வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியுடன் சக்தியை பார்க்கிறார்கள். ஈஸ்வரி சக்தியிடம், “இப்போ உங்க அண்ணா இந்த வீட்டிற்கு வர வேண்டும், அப்படி தானே..” என்றதும் சக்தி உடனே,“ ஆமா” என்கிறார்.
குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்தால் கதிரின் ஆட்டம் மாட்டிக் கொள்ளும் என பயத்தில் அதற்கான வேலைகளை அவர் ஒரு புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கடுத்து குணசேகரனின் சூழ்ச்சியில் சிக்கி இருக்கும் சக்தியை ஜனனி மீட்பாலா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |