ஒருவழியாக தர்ஷனுக்கு திருமணம் முடிஞ்சிருச்சு.. கூச்சலிட்ட பெண்கள் அடங்கிய குணசேகரன்
குணசேகரன் நினைத்ததை போன்று தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
வெளியில் வந்த குணசேகரன் நாடகம் ஆடி தர்ஷாவை வீட்டிற்கு வரவழைத்து அவரையும், அவருடன் வந்தவர்களையும் ஆட்களை வைத்து அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் ஜீவானந்த இடம் பேசி பார்கவி தர்ஷன் மற்றும் வாத்தியார் அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பின்னர் கதைக்களம் சூடுபிடித்துள்ளது.
இதெல்லாம் போதாது என கதிர் மற்றும் அறிவுக்கரசி இருவரும் சேர்ந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை துன்புறுத்தும் அளவிற்கு அடித்து சித்தரவதை செய்து விட்டார்கள். பிறகு ஜீவானந்தம் அவர்களிடமிருந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பார்கவியின் தந்தை இறந்து விட்டார்.
திருமணம் முடிச்சிருச்சு..
இந்த நிலையில், தந்தையுடன் வாழ்ந்து வந்த பார்கவிக்கு தற்போது யாரும் இல்லை. அப்பாவை இழந்த பார்கவியை அழைத்து கொண்டு அவருக்கு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் மருமகள்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் ஒரு பக்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கையில் அறிவுக்கரசி தங்கையையும் தர்ஷனனையும் ஒரே அறைக்குள் அனுப்பி வைக்கிறார்.
விசாலாட்சி செய்த அலப்பறையால் அறிவுக்கரசியால் திருமணத்தை நடத்த முடியவில்லை. கதிர்- குணசேகரன் இன்னொரு பக்கம் கைது செய்து விடுவார்களா? என்ற பயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் இப்படியாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் தர்ஷன்- அன்புக்கரசி இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்க்கும் பொழுது இருவருக்கும் இனி வரும் எபிசோட்களில் முடிந்து விட்டது போன்று தெரிகிறது.
தர்ஷாவுக்காக போராடி பெண்கள் அடங்கி, குணசேகரன் வழிக்கு வந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |