வீட்டை விட்டு வெளியேறும் பார்கவி.. குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்- இனி நடக்கப்போவது என்ன?
குணசேகரன் செய்த சதியால் பார்கவி வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பம் வந்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல் 2.
இந்த சீரியலில், பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் நபர்களின் ஆவணத்தை அடக்குவது போன்ற காட்சிகள் வகைக்கப்பட்டு, சீரியல் நகர்த்தப்படுகிறது.
இதன்படி, தர்ஷன் பார்கவியுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அன்புக்கரசி அவர்களை அறைக்குள் வைத்து அடைத்து விட்டு அவருடை அக்காவிற்கு தகவல் சொல்கிறார்.
கடும் கோபத்துடன் வந்த அறிவுக்கரசி இருவரையும் வெளியில் வரவழைத்து பார்கவியுடன் பெரிய ரகளை செய்கிறார். பார்கவி, தர்ஷன் இரண்டு பேரின் காலையும் உடைக்க வேண்டும் என்ற முடிவுடன் காத்திருந்த அறிவுக்கரசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வீட்டில் நடப்பதை ஒருவழியாக தடுத்து நிறுத்திய ஜனனி, நடந்த விடயங்களை சாருலதா விட கூற, “ எதுக்கு தர்ஷன் இந்த மாதிரி தேவை இல்லாத வேலைகள் எல்லாம் பண்றான். இந்த விஷயம் மட்டும் பெருசா ஆகிரும். பிரச்சனை பெரிதாகிவிடும் நீங்கள் பொலிஸாரிடம் போங்க..” என்கிறார்.
இந்த விடயம் குணசேகரன் காதுகளுக்கு வர அவர்,“ தர்ஷன் நம்மளை ஏமாற்றுகிறான். இதில் ஏதோ திட்டம் இருக்கிறது. அந்த பாட்டுக்காரன் மகளின் கதையை முடிக்க வேண்டும்..” என கோபத்துடன் சொல்கிறார்.
ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்
இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஜனனி, பார்கவியின் பாதுகாப்பிற்காக பொலிஸாரை வரவழைத்து பார்கவியை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்.
வீட்டிற்கு வந்த பொலிஸா், “அந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு, உங்க எல்லாரையும் தூக்கி உள்ள வச்சுருவேன்..” என மிரட்டி சென்றுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அறிவுக்கரசிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
திருமண வேலைகள் மீண்டும் தடபுடலாக ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது. இனி தர்ஷனும், ஈஸ்வரியும் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |