கணவருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய பெண்கள்.. கைது செய்யப்பட்டவர் யார்? பரபரப்பான கதைக்களம்
பார்கவி தந்தை கொலை வழக்கில் நியாயம் கேட்டு, பெண்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
வெளியில் வந்த குணசேகரன் நாடகம் ஆடி தர்ஷாவை வீட்டிற்கு வரவழைத்து அவரையும், அவருடன் வந்தவர்களையும் ஆட்களை வைத்து அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் ஜீவானந்த இடம் பேசி பார்கவி தர்ஷன் மற்றும் வாத்தியார் அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பின்னர் கதைக்களம் சூடுபிடித்துள்ளது.
இதெல்லாம் போதாது என கதிர் மற்றும் அறிவுக்கரசி இருவரும் சேர்ந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை துன்புறுத்தும் அளவிற்கு அடித்து சித்தரவதை செய்து விட்டார்கள். பிறகு ஜீவானந்தம் அவர்களிடமிருந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பார்கவியின் தந்தை இறந்து விட்டார்.
கைது செய்யப்படுபவர் யார்?
இந்த நிலையில், தந்தையுடன் வாழ்ந்து வந்த பார்கவிக்கு தற்போது யாரும் இல்லை. அப்பாவை இழந்த பார்கவியை அழைத்து கொண்டு அவருக்கு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் மருமகள்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் குணசேகரன் ஆதரவாக இருக்கும் பொலிஸார் ஜனனிக் கொடுத்த புகாரை எடுக்காத காரணத்தினால் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன் பின்னரும் பொலிஸார் புகார் எடுக்கவில்லை.
யாராவது ஒருவரை கைதுச் செய்ய வேண்டும் என்கிறார். இதன்படி, குணசேகரனின் வழக்கறிஞரும் யாராவது பொலிஸில் குற்றவாளியாக ஆஜராகும்படி கூறுகிறார். குணசேகரன் இதனால் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.
திட்டத்தின் தலைவராக இருந்த குணசேகரன் கைது செய்யப்படுவாரா? அல்லது அவரின் அன்பு தம்பியான கதிர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக அடுத்தடுத்து ப்ரோமோக்கள் வந்துள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |