தர்ஷன் திருமணத்திற்கு ஓகே சொன்ன ஈஸ்வரி.. மிரட்டல் விடும் கதிர்- அடங்கி போவது எதற்காக?
இதுவரையில் மகன் திருமணத்திற்கு சரி சொல்லாத ஈஸ்வரி, சாமி வாக்கு சொன்ன பின்னர் சரி சொல்கிறார். இதற்கு பின்னால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல்2 சீரியலில், தர்ஷன் கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என குணசேகரன் போராடிக் கொண்டிருக்கிறார்.
மகன் திருமணத்தை மானப் பிரச்சினையாக எடுத்த குணசேகரன் அதற்காக அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷ்சன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
கதிருடன் கூட்டுச்சேர்ந்த அறிவுகரசியை தன்னுடைய தங்கை வாழ்க்கைக்காக பார்கவியின் தந்தையை கொலைச் செய்து விட்டு, அந்த பலியை தூக்கி ஞானம் மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.
களத்தில் இறங்கிய ஈஸ்வரி
இந்த நிலையில், விசாலாட்சியின் தம்பி வீட்டிற்கு வந்து, குணசேகரன் வாரிசு திருமணத்தில் ஒரு உயிரி பலி உள்ளது என கூறிச் சென்று விட்டார். இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
மகனின் வாழ்க்கைக்காக எதையும் செய்ய துணிந்த ஈஸ்வரி மகனின் விருப்பத்திற்கேற்ப பார்கவியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இது குறித்து தர்ஷனிடமும் கூறுகிறார்.
இது பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில் அறிவுக்கரசி கதிருடன் சேர்ந்து புதிய திட்டத்தை தீட்டுகிறார். இவர்களின் திட்டத்தில் ஒரு உயிர் போகும் என்றால் அது சில சமயங்களில் அன்புக்கரசியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழழைப் போன்று பெண்களே இந்த பிரச்சினையில் வெற்றிப் பெறுவார்கள் என சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |