குணசேகரனை டம்மியாக்கி வேடிக்கை பார்க்கும் பிரபலம்.. நாச்சியப்பனின் பிளான் என்ன? கடுப்பில் ஜனனி
நாச்சியப்பன் அப்பத்தாவை வைத்து புது பிளான் போட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் ஆரம்பமான காலத்தில் இருந்து டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஜனனியின் அப்பா அவருடைய குடும்பத்தையும் ஆத்தாவையும் கண்ட பின்னர் ஜனனியையும் அவருடைய அம்மாவையும் அப்படியே விட்டுவிட்டு தனது குடும்பத்தின் பக்கம் சென்று விட்டார்.
ஜனனியிடம் இருந்து வாங்க முடியாத கம்பனியை அவருடைய அப்பாவை சாக்காக வைத்து வாங்க முயற்சிக்கிறார்கள்.
இது புரியாமல் நாச்சியப்பன், ஏதோ பிளான் போட்டுள்ளதாக ஜனனியிடம் கூறுகிறார்.
பெரும் குழப்பத்தில் புலம்பும் நாயகி
இந்த நிலையில் ஜனனி அவருடைய அம்மாவை தனியாக விட முடியாமல் அவருடன் அழைத்து வருகிறார். இதற்காக ஆதரவாக சக்தியும் உடன் இருக்கிறார்.
பெண்கள் அழுவதால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும் என சக்தி கடுப்பில் நந்தனியிடம் கத்துகிறார்.
ஜனனியின் ஏமாற்றத்தை தொடர்ந்து இந்த பிரச்சினையால் சீரியலின் டிஆர்பி ஏறியுள்ளது.
அத்துடன் குணசேகரனின் முக்கியத்துவம் அப்படியே ஜனனியின் ஆத்தவாக நடிக்கும் கில்லி பட நடிகையின் மீது மாறியுள்ளது.
இப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சீரியலில் அடுத்து பரபரப்பான காட்சிகள் காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடதக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |