எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காணாமல் 3 பிரபலங்கள்.. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மூவரை காணவில்லை என சின்னத்திரை ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, பார்வதி, சபரி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, ஷெரின் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படும் இவர்கள் தான் கதைக்களத்தை விறுவிறுப்பாக்கி வருகிறார்கள்.
தற்போது வெற்றிநடைபோட்டு கொண்டு சீரியலில் இருந்து முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை காணவில்லை என கடந்த சில வாரங்களாக இணையவாசிகள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

1. கனிகா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் தான் கனிகா. இவர் சீரியலில் நாயகன் என கொண்டாடப்படும் ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து வந்தார். தன்னுடைய கணவரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போன்று காட்டப்பட்டு, தற்போது சீரியலில் இல்லை.

2. கரிகாலன்
விறுவிறுப்பான தொடரை கலகலப்பாக கொண்டு செல்பவர் என்றால் அவர் கரிகாலன் தான். அவரின் டைமிங் காமெடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக இவரை சீரியலில் காணவில்லை என சின்னத்திரை ரசிகர்கள் தேடி வருகிறார்கள். அவருக்கு பதிலாக முல்லையை காமெடியனாக இருந்து வருகிறார்;

3. கதிர்
ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக சிடுசிடுவென இருப்பவர் கதிர் தான். பெண்களை அசிங்கமாக பேசுவது, பார்ப்பது என பெண்களை ரவுண்ட் கட்டுவதில் கில்லாடியாக இருந்தார். அவரை பற்றிய அப்டேட்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இன்னும் சிலர் அறிவுக்கரிசிக்கு பயந்து பதுங்கி இருக்கிறாரா? எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |