மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதிர்.. சொத்து வேண்டாம்! குணசேகரன் போட்ட சதியா இது?
கதிரின் மகள் விஷேசத்தில் தன்னுடைய ஆட்டத்தை குணசேகரன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.
ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
கொந்தளிப்பில் கதிர்
இப்படி பல பிரச்சினை வீட்டில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, குணசேகரனுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் வீட்டில் மறுபடியும் குழப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன.
பெரிய பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு எப்படியாவது விஷேசம் வைத்து விட வேண்டும் என நந்தினி ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கதிரிடம் பேசி அவரை மனதை குணசேகரன் மாற்றியுள்ளார்.
சொத்துக்களை கொடுத்தவுடன் பாதி குணசேகரனாக வாழ்ந்து வந்த கதிர், தன்னிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் குணசேகரனுக்கே திருப்பிக் கொடுத்துள்ளார். இதனால் இவ்வளவு நாளாக போட்டியிருந்த வேஷத்தை கலைத்து விட்டு பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
நந்தினி வீட்டிலுள்ளவர்கள் யாரும் வராமல் பிள்ளைக்கு விஷேசம் செய்யக் கூடாது என குணசேகரன் கூறுகிறார். இவரின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தை கண்டுபிடித்த ஜனனி கூர்ந்து கவனித்து வருகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
