ஜாமினில் வெளியே வரும் குணசேகரன்- ஜான்சி ராணியால் சூடுபிடிக்கும் கதைக்களம்
குணசேகரன் ஜாமினில் வெளியில் வருவதால் ஜான்சி ராணியின் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.
ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
எப்படியாவது வீட்டிலுள்ளவர்களை மணி விழாவில் பிரிக்கலாம் என காத்திருந்த குணசேகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜனனி குணசேகரன் செய்தது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இறுதி நாள் அவரின் வேலையை காட்டியுள்ளார்.
கொந்தளிப்பில் அறிவுகரசி
இந்த நிலையில், பிணையில் வெளிவந்த குணசேகரனின் காலம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஜெயிலுக்குள் மீண்டும் செல்லப்போவதாக தம்பிகளிடம் கூறி வேதனைப்படுகிறார். அதில் சக்திக்கு அண்ணன் இல்லாத காரணத்தினால் அழுகையை அடக்க முடியவில்லை.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், தர்ஷன் காதலியை அடித்து கொல்லச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவுகரசி மீண்டும் வெளியில் வந்து திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என வெறியுடன் இருக்கிறார்.
மணி விழாவை நிறுத்தியதால் ஈஸ்வரியை விசாலாட்சி வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிறார். “நீ இனி இந்த வீட்டுக்குள் யாரும் இல்லை. பிள்ளைகளுக்கு அம்மா மாத்திரம் தான்..” எனக் கூறுகிறார்.
ஜாமினில் வெளியில் வரும் குணசேகரன்
“தம்பதிகளிடம் இனி வீட்டுக்கு வரமாட்டேன்.. ஜெயிலுக்கே செல்கிறேன்..” என சோகமாக சென்ற குணசேகரன் மீண்டும் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளார். மீண்டும் குணசேகரனுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் விசாலாட்சி மற்றும் ஜான்சி ராணியின் கை வீட்டில் ஓங்கியுள்ளது.
அப்போது பார்த்து நந்தினிக்கு ஒரு சாப்பாடு ஓடர் வருகிறது. அதற்கு அவர், “சாப்பாடு ஓடர் செய்யலாம், ஆனால் இந்த வீட்டில் இருந்து செய்ய முடியாது..” என்கிறார். இது தொடர்ந்து வீட்டில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |