எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் முல்லை யார் தெரியுமா? இது தெரியாம போச்சே
எதிர்நீச்சல் சிரியலில் நடிக்கும் முல்லைக்கு இது தான் முதல் சீரியல் என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நிச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. தற்போது இந்த சீரியலில் வரும் முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.
இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்ற இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் விறுவிறுப்பாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.
பழையபடி திரும்பவும் குணசேகரனின் ஆதிக்கம் தான் இந்த சீரியலில் தற்போது தர்ஷன் திருமணத்தை வைத்து கதைக்களம் நகர்ந்து செல்கின்றது.
முல்லை கதாபாத்திரம்
இவ்வளவு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் முல்லையோட கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் உண்மையான பெயர் லட்சுமி காந்த்.
இவர் சினிமா துறையில் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேலாக இருக்கிறார். இவர் தீவிர ரஜினி ரசிகராம். ரஜினியின் படத்தில் வரும் பிரபலமான காட்சியை அப்படியே ரீகிரியேட் செய்து அதை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இது தவிர தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் பிரபலமான மாஸ் இவர் ரீகிரியேட் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் லட்சுமி காந்தன் எனும் பெயரில் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.
தற்போது கன்டென்ட் கிரியேட்டராக இருக்கும் லட்சுமி காந்திற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் முதல் சீரியல்.
இதில் காமெடியாக நடித்து மக்கள் மனம் கவர்ந்து வருகிறார் முல்லை. இதுதான் முதல் சீரியலா என பலரும் யோசிக்கும் அளவிற்கு இவருடைய திறமை நன்றாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |