Ethirneechal: அறிவுக்கரிசியுடன் டூயட்.. கதிரை வெளுத்து வாங்கிய நந்தினி
எதிர்நீச்சலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கதிரை அவருடைய மனைவி நந்தினி வெளுத்து வாங்கிய காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து ஜனனியை ஒருவழியாக இந்த விவாகரத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போன்று ஜனனி வெளியில் வந்து விட்டார்.
அதன் பின்னர் வீட்டில் தான் ஈஸ்வரிக்கு ஏதோ நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை சேகரிக்க போராடினார். அப்போது அறிவுக்கரசி கையில் இருந்த தொலைபேசி சிக்கியது.
வெளுத்து வாங்கிய நந்தினி
இந்த நிலையில், தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
குணசேகரன், அறிவுக்கரசி இருவரும் வசமாக கொலைச் செய்து சிக்கியுள்ளனர். ஆனாலும் அவர் அன்புக்கரசியுடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
இப்படி சீரியல் ஒரு பக்கம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், கதிரும் அறிவுக்கரசியும் இணைந்து டூயட் ஆடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதனை பார்த்து கடுப்பான நந்தினி தலைவன் தலைவி திரைப்பட பேரரசி அளவுக்கு இறங்கி திட்டுகிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படி நீங்க ஆரம்பத்தில் செய்திருக்க வேண்டும்” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |