அறிவுக்கரிசியுடன் டூயட் பாடும் கதிர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் நடக்குமோ?
தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்திற்காக போராடும் அறிவுக்கரசியுடன் கதிர் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து ஜனனியை ஒருவழியாக இந்த விவாகரத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போன்று ஜனனி வெளியில் வந்து விட்டார்.
அதன் பின்னர் வீட்டில் தான் ஈஸ்வரிக்கு ஏதோ நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை சேகரிக்க போராடினார். அப்போது அறிவுக்கரசி கையில் இருந்த தொலைபேசி சிக்கியது.
அறிவுக்கரசியுடன் டூயட் ஆடும் கதிர்
இந்த நிலையில், தர்ஷனுக்கு எதோ மருந்து கொடுத்து மயக்கமடைய செய்து விட்டு தற்போது அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்க இரண்டு நாட்களுக்கு முன்னரே மண்டபத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
“தர்ஷனனுக்கு என்ன நடந்தது அவன் ஏன் இப்படி இருக்கிறான்?” என சக்தி ஒரு பக்கம் சண்டைக்கு செல்ல கதிரும் அறிவுக்கரசியும் இணைந்து ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கொலைச் செய்ய போடுகிறார்கள்.
இப்படி சீரியல் ஒரு பக்கம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், கதிரும் அறிவுக்கரசியும் இணைந்து டூயட் செய்யும் காணொளியொன்று சின்னத்திரை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ தர்ஷன்- அன்புக்கரசி திருமணம் நடப்பதற்கு முன்னர் கதிர்- அறிவுக்கரசி திருமணம் நடந்து விடுமோ..” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |