குணசேகரனுக்கு எதிராக திரும்பிய உயிர் தம்பி.. மருமகளை வெட்ட அரிவாளுடன் வரும் மாமியார்
எதிர்நீச்சல் சீரியலில் மருமகள்களை வெட்ட அரிவாளுடன் விசாலாட்சி கிளம்பியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் குடும்பங்களின் நடக்கும் பெண் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், குணசேகரனின் ஒரே மகளான தர்ஷினியை யாரோ கடத்தி விட்டனர்.
கடத்தப்பட்ட நேரத்திலிருந்து இதுவரையில் ஈஸ்வரியும் மற்ற மருமகள்களும் இணைந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தர்ஷினி எங்கு தேடினாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஜனனி பொலிஸாரிடம் புகார் கொடுத்து ஜான்சி ராணியையும், கரிகாலனையும் பிடித்து கொடுத்துள்ளார்.
அரிவாளுடன் கிளம்பிய மாமியார்
இந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது கதிர் முதல் தடவையாக, “ என்னை மாற விடுயா?..” என குணசேகரனுக்கு எதிராக பேசியுள்ளார்.
தர்ஷினிக்கு ஆதரவாக நிற்கும் கதிரை பார்த்து குணசேகரன் ஆடி போயுள்ளார்.
இந்த செய்தி கேட்ட விசாலாட்சி இதற்கெல்லாம் மருமகள்கள் தான் காரணம் என அவர்களை வெட்ட பெரிய அரிவாளுடன் வாசலில் வந்து நிற்கிறார்.
மகன் மீதுள்ள பாசத்தில் விசாலாட்சி இப்படி நடந்து கொள்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. அத்துடன் ப்ரோமோ பார்த்த இணையவாசிகள், “ விசாலாட்சியின் இந்த முடிவு தவறானது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |