மனைவிக்காக முதல் தடவையாக கொந்தளித்த கதிர்.. ஆடி போன குணசேகரன்- ஷாக்கில் ரசிகர்கள்
மனைவிக்காக முதல் தடவையாக கொந்தளித்த கதிரை பார்த்து குணசேகரன் ஷாக்காகியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
அண்ணன்- தம்பி உறவையும் பெண்களின் அடிமைத்தனத்தையும் இந்த சீரியல் கருப்பொருளாக கொண்டு நகர்த்தப்படுகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியான காட்சியில், முதல் முறையாக நந்தினிக்காக குணசேகரனை கதிர் எதிர்த்து பேசி உள்ளார்.

அத்துடன் மனைவியை “ திட்டுங்கள் ஆனால் வாடி போடி என்று பேசாதீர்கள்..” என குணசேகரனை பார்த்து கூறியுள்ளார்.
இவர் இப்படி கூறியதும் நந்தினி முதற்கொண்டு வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கதிரை அடித்து படுத்த படுக்கையாக்கிய போது நந்தினி தான் அனைத்து உதவிகளையும் செய்து அவரை சுகப்படுத்தியுள்ளார்.
மனைவிக்காக கடுப்பாகிய கதிர்

இந்த நிலையில் இன்று அனைவருடைய முன்பும் “வாடி போடி” என்று குணசேகரன் பேசியதால் கதிர் கடுப்பாகியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், குணசேகரனின் சாமியார் மாமாவிடம் “யார் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?” என கேட்கிறார். அதற்கு அவர், இதற்கான பதிலை மருமகள்களிடம் சொல்லி இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குணசேகரன் பயங்கரமாக கோபமாகி இருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் பேச வந்த நந்தினியை தான் குணசேகரன் திட்டியுள்ளார். வீட்டிலுள்ள அனைவரும் அமைதியாக இருக்க, முதல் முறையாக மனைவிக்காக கதிர் வாய் திறந்துள்ளார்.
இதன் பின்னர் அந்த இடத்தில் ஒரு நாடகத்தை போட்டு விட்டு கோபமாக குணசேகரன் எழுந்து சென்றுள்ளார். அத்துடன் தர்ஷினியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் கரிகாலனும், ஜான்சியும் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் கதை இனி என்னாவாக போகின்றது என்பதனை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
மேலும் ப்ரோமோ பார்த்த ரசிகர்கள், “ இப்போது சரி கதிருக்கும் ஞானம் வந்துள்ளதே...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |