வெட்டிக் கொல்லணும்.. குணசேகரன் அடுத்த திட்டம்- பார்கவியிடம் ஜனனி சொன்ன வார்த்தை
எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக திருமணமாகி வந்த மருமகள் பார்கவியை எப்படி கொல்லலாம் என தம்பிகளுடன் சேர்ந்து குணசேகரன் திட்டம் போடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில், தர்ஷன் திருமணத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் வந்தன. ஆனாலும் கடைசியாக தர்ஷன் அவருடைய காதலியான பார்கவியை கரம்பிடித்து விட்டார்.
இதற்கிடையில், அறிவுக்கரசி- குணசேகரன் செய்த அனைத்து குற்றங்களும் அனைவருக்கும் தெரியவருகிறது.
குணசேகரனின் வீராப்புக்கு ஆதரவாக நின்று தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என போராடிய அறிவுக்கரசி கொலை பலியுடன் சிறைக்கு போய் விட்டார்.
அடுத்து, வீட்டிற்கு வந்த குணசேகரன் அலுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்குள்ள ஆதாரங்களை சக்தி எடுத்து விட்டார்.
பழிவாங்க காத்திருக்கும் பார்கவி
இந்த நிலையில், புது மருமகளுடன் வீட்டிக்கு வந்த மருமகள்கள் மாடியில் அமர்ந்திருக்க ஞானம், கதிர் இருவரும் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு முடிவுக்கட்ட நினைக்கும் குணசேகரனிடம் ஜனனி குணசேகரன் பற்றிய தகவல்களை கொடுப்பதற்காக ஒருவாரம் நேரம் கேட்கிறார்.
இப்படி வீட்டில் பரபரப்பு கிளம்பிய நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் உயிருக்கு எதுவும் ஆபத்து வருமா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஜனனி பார்கவியிடம், “உன்னை இந்த வீட்டிலுள்ள யாருக்கும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை ஒன்று இருக்கிறது. உன்னுடைய அப்பாவை இந்த வீட்டு வாசலில் அடித்தே கொன்றார்கள். அதுக்கெல்லாம் நம்ம பதிலடி கொடுக்கனும்..” என ஆவேசத்துடன் பேசி மருமகளை வரவேற்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
