Ethirneechal: வெளிவந்த பலநாள் உண்மை... ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார்?
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அவ்வப்போது பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.
ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் போட்டுள்ள குணசேகரன் கைது செய்யப்பட்டும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். விசாலாட்சி மகனின் சுயரூபத்தினை அறிந்து கொண்டு தற்போது மருமகள்களுக்கு முழு ஆதரவை கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி தற்போது கண்விழித்து வீட்டிற்கு வருகின்றார். ஈஸ்வரியின் வருகை குணசேகரன் கூட்டத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக ராவணன் ஆதிமுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வெளியாகிய ப்ரோமோவில் கலெக்டர் மதிவதனி ஜனனியிடம் ஒரு கொடூரமான ஒருவன் வரப்போகிறான் என்று கூறியுள்ளார்.
மனைவி யார்?
இப்படி அவர் கூறுகையில் மதிவதனி அவரின் மகள் வந்து நான் பெரிய பொன்னாகி விட்டேன்,பிறகு ஏன் என்னிடம் எதுவும் கூற மாட்டிகிறீர்கள் என்று கேட்கிறாள் .
அப்போது அவள் நீங்கலும் அப்பாவும் ஏன் தனியாக வாழ்கிறீர்கள் என்று கேட்டு நான் ஒரு படத்தை எடுத்தேன் அதை பத்தி நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும் என்று கூறினாள்.

அந்த புகைப்படத்தில் ராவணனும் மதிவதியும் இருக்கின்ற புகைப்படத்தை காட்டி உள்ளாள். இதன் மூலம் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி மதிவதனி என்று தெரிய வந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |