Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த ஜனனி! சக்திக்கு வேறொரு திருமணமா? கதையில் திடீர் மாற்றம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் நிலையைக் கண்ட ஜனனி வீட்டிற்கு வந்து கரிகாலனை கன்னத்தில் அறைந்ததுடன், அரிவாளுடன் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச சென்ற ஈஸ்வரியை அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ஈஸ்வரியின் நிலைமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் வீட்டு பெண்கள் உறுதியாக இருக்கின்றனர்.
நேற்றைய தினத்தில் நந்தினி பொங்கி எழுந்த நிலையில், இன்று ஜனனி அரிவாளுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனனியின் இந்த நிலையைக் கண்ட குணசேகரன் சக்தியை பிரித்து அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |