Ethirneechal: நந்தினியின் தொழிலுக்கு வந்த ஆபத்து... களமிறங்கிய குடும்ப பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி சமையல் போட்டியில் வெற்றிபெற்று புதிய ஆர்டர் ஒன்றினை பெற்றுள்ள நிலையில், அவரது தொழில் போட்டியாளர் பல சதிவேலைகளை செய்து இவர்களின் ஆர்டரை தடுத்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். குணசேகரனின் சொத்துக்கு உரிமையாளராக இருக்கும் கதிர் அதனை அடமானம் வைத்து பணம் சம்பாதித்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த மயூ இந்த சீரியலில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தர்ஷனுக்கு ஜோடியாக இவரை கொண்டு வருகின்றார்.
அன்புவின் அக்கா அறிவுக்கரசி பயங்கரமான வில்லியாக வலம்வருகின்றார். பணத்திற்காக தர்ஷனும் பழைய காதலியை கழற்றிவிட்டுவிட்டு இவரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.
இதற்கிடையே நந்தினியின் மசாலா பொடி ஆர்டர் கைவிட்டு செல்லும் சூழ்நிலை எழுந்துள்ளது. இதற்காக வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் விடாமுயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்டரை பெறமுடியாத மற்றொரு நபரும் பல சதிவேலைகளை செய்து வருகின்றார். கடைசியில் நந்தினி ஆர்டரை சிறப்பாக செய்து கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |