மீண்டும் அடுப்படியில் அடிமையாக எதிர்நீச்சல் பெண்கள்... மாஸாக காரில் எண்ட்ரி கொடுத்தது யார்?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், ஜான்சிராணி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆட்டம் காட்டி வருகின்றார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவர் மரணமடைந்தும் சீரியலில் சில தினங்கள் அவரது காட்சி ஒளிபரப்பப்பட்ட நிலையில், தற்போது நிரந்தமாக சீரியலிலிருந்தும் சென்றுள்ளார்.
தற்போது புதிய குணசேகரன் யார்? என்ற கேள்வி ஒட்டுமொத்த பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜான்சிராணி தனது அண்ணனுக்கு பதிலாக தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவருடன் குணசேகரனின் அம்மாவும் சேர்ந்து வீட்டு பெண்களை மீண்டும் அடிமைகளாக அடுப்படியில் வைக்க உள்ளனர்.
இந்த பிரச்சினை நடுவே கார் ஒன்றில் மாஸாக யாரோ எண்ட்ரி கொடுக்கின்றனர்? இவ்வாறு மாஸாக எண்ட்ரி கொடுப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடள் காணப்படுகின்றனர்.