விஜய் ஆண்டனி மகளின் இறுதி பயணம்: கடைசி நொடிகளில் கண்ணீர்விட்ட அம்மா பேசியது என்ன?
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அவரது தாய் ஆலய ஆராதனை ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சற்று மன அழுத்தத்தில் இருந்த இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம் கதறியழுது நேற்றைய தினத்தில் மகளை வழியனுப்பி வைத்துள்ளனர்.
அப்பொழுது ஆலய வழிபாட்டில் அவரது தாய் கண்ணீர் மல்க மகளைக் குறித்து பேசியுள்ளார்.
உண்மையை உடைத்த தாய்
பாத்திமா பேசுகையில், உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன்... இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும் அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம்... என்ன பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே... என்று கதறியழுதுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மீரா தங்கம்... செல்லம்... குட்டி... ஏன் நீ சென்றாய்? ஏன் நீ சென்றாய்? எழுந்திருமா எழுந்திரு... நீ ஒரு சேடிஷ்.. சீக்கிரமாக செல்ல ஆசைப்பட்டாயா? ரொம்ப அவசப்பட்டு போயிட்டியேமா... உங்க அப்பாவிற்கும் தங்கைக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்... அம்மா உன்மேல கோபமா இருந்தேனு நினைக்காதடா... அப்செட்டாக இருந்தேன்.. மீரா தங்கம் ஐ லவ் யூ டா.... ஐ லவ் யூ சோ மச்... என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
அந்த ஒரு நிமிடம் அப்பாவிடம், அம்மாவிடம் சொல்லி இருக்கலாமே, இனிமேல் காலையில் யார் எனக்கு முத்தம் கொடுப்பார்கள்? யாரை நான் கொஞ்சுவேன், கடவுள் எனக்கு கொடுத்த தேவதை நீ, சந்தோஷமாக இரு RIP என கண்ணீருடன் பேசியுள்ளார்.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |