நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு அவர் செய்த தவறு தான் காரணம்... உண்மையை உடைத்த ஜோதிடர்
சீரியலில் கம்பீரமாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவர் இறப்பை குறித்து ஜோதிடர் ஒருவர் பேசியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
ஜோதிடருடன் கருத்து மோதல்
ரிவி ஒன்றில் ரியாலிட்டி நிகழ்ச்சியான தமிழா தமிழா-வில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருந்தார். ஜோதிடர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் சென்று கொண்டிருந்தது.
கெஸ்டாக வந்த மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியுள்ளார். 'இந்தியா முன்னேறாமல் இருக்க நீங்க தான் காரணம். ஜோதிடத்தை பார்ப்பவரையும், கூறுபவரையும் மன்னிக்கவே முடியாது என்றும் அவர்களை ஒருமையிலும் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது இவரது இறப்பிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர். ஜோதிடர்களை எதிர்த்ததால் தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று கூறப்படுகின்றது.
ஆனால் அவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் வாக்குவாதம் செய்த ஜோதிடர், மகரிஷி கே ஆர் மந்திராசலம் பேசுகையில், அன்று நடைபெற்றது சாதாரண நிகழ்ச்சி என்றும் அது அந்த அரங்கத்திற்குள்ளே முடிந்துவிட்டது.
ஜோதிடம் என்பது ஒருவரை வாழ வைப்பது மட்டுமே இருக்கின்றது. நாங்கள் அவ்வாறான காரியத்தினை செய்வதில்லை.... மேலும் இவரது இறப்பிற்கு காரணம் அவர் சினிமாவிற்கு வந்ததே...
ஏனெனில் அவர் குறித்த சீரியலில் எப்பொழுதும் கோபக்கார நபராகவே இருப்பார்... அவ்வாறு இருப்பது உடல் அளவில் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அவர் இவ்வாறு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அவர் சினிமாவில் எடுத்த ரிஸ்க் என்று கூறியுள்ளார். மேலும் அவரது மறைவிற்கு ஜோதிடர்களின் சார்பில் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |