Ethirneechal: நந்தினியிடம் கெஞ்சும் கதிர்... இப்படி தலைகீழாக மாறிட்டாரே
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மணிவிழாவிற்கு நந்தினி அப்பா சீர் செய்வதற்காக கதிர், பயங்கரமாக கெஞ்சி மனதை மாற்றும் காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனியை தவிர மற்ற மருமகள்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவரும் நிலையில், ஜனனியை பழிவாங்க குணசேகரன் பல சதி வேலைகளை செய்து வருகின்றார்.
ஆனாலும் ஜனனி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது குறிக்கோளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது குணசேகரனுக்கு மணி விழா நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு வீட்டு மருமகள்கள் யாரும் சம்மதிக்காத நிலையில், குணசேகரன் ஈஸ்வரி அப்பாவை அனுப்பி மிரட்டி ஈஸ்வரியை சம்மதிக்க வைத்துள்ளார்.
தற்போது விழாவில் 15 லட்சத்திற்கு சீர் செய்ய நந்தினி குடும்பத்தினரை விசாலாட்சி நெருக்கடி கொடுக்கின்றனர். இதற்காக கதிர் நந்தினியிடம் கெஞ்சியுள்ளார்.
தானே பணம் வருவதாகவும் அதனை வைத்து அவர் சீர் செய்யட்டும் என்று கூறி நந்தினியிடம் அனுமதி வாங்குவதற்கு பயங்கரமாக ஐஸ் வைத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |