சிங்கப்பெண்ணாக வந்து நின்ற அப்பத்தா.. குணசேகரனுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி
எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன அப்பத்தா தற்போது சிங்கப்பெண்ணாக வந்து நிற்கும் காட்சி ப்ரொமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது. ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற போது ஜீவானந்தத்தின் மனைவியை குணசேரகன் ஆட்கள் கொலை செய்துவிட்டனர். பின்பு ஜீவானந்தத்தை நல்லவர் என்று ஜனனி நம்பிய நிலையில், வீட்டில் இருந்த அப்பத்தா காணவில்லை என்று கதைகட்டினார்கள் குணசேகரன்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் அப்பத்தா கம்பீரமாக வந்ததுடன், வக்கீலுடனும் தனது சொத்து விடயமாக பேசி குணசேகரனுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |