Ethirneechal: பார்கவி- ஜீவானந்தம் இறந்துட்டாங்க- பரபரப்பான ப்ரொமோ
ஜீவானந்தம்- பார்கவி இருவரும் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடல்களை பொலிசார் தேடி வருவதாகவும் பொலிசார் அறிவிக்க அதிர்ச்சியில் உறைகின்றனர் மருமகள்கள்.
பார்கவி மரணமா?
தர்ஷனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஈஸ்வரியின் கனவை நினைவாக்க போராடுகின்றனர் மருமகள்கள்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கத்தில் தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்திற்காக அனைவரும் மண்டபத்தில் இருக்கின்றனர்.
அதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக நடந்து வருகிறது, ஆனால் தர்ஷன்- பார்கவிக்கு தான் திருமணம் என சபதமிடுகிறார் ஜனனி.
இந்நிலையில் ஜீவானந்தம், பார்கவியை தேடி பொலிசார் வருகின்றனர், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்துவிட அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கின்றனர்.
அந்த வேளையில், பொலிசார் சுட்டத்தில் ஜீவானந்தம் மீது குண்டு பாய்கிறது, அவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
பேட்டியளித்த பொலிசார்
இந்நிலையில் இன்றைய எபிசொடில், பொலிசார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கின்றனர்.
அதில், ஜீவானந்தம்- பார்கவி இருவரும் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடலை தேடி வருவதாகவும் அறிவிக்கின்றனர்.
மேலும் பல குற்றச்செயல்களில் ஜீவானந்தம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதைப்பார்த்த மருமகள்கள் மற்றும் சக்தி அதிர்ச்சியில் உறைகின்றனர், அடுத்த என்ன நடக்கும் என பரபரப்பான கதைக்களத்துடன் எதிர்நீச்சல் தொடர்கிறது நகர்ந்து கொண்டிருக்கிறது.