Ethirneechal: சக்தியை நெருங்கிய ஜனனிக்கு கிடைத்த பேரதிர்ச்சி... நொடிக்கு நொடி நிகழும் பதற்றம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்தியை தேடி மிகவும் அருகில் சென்றுவிட்ட நிலையில், இதனை தெரிந்து கொண்ட ராமசாமி தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சக்தியை தனது காலில் விழ வைத்த குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களையும் ஆட்டிப் படைத்து வருகின்றார்.
ஜனனி வேறு இடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சக்தியை தேடி அலைந்து ஒருவழியாக அவர் இருக்கும் இடத்தை நெருங்கியுள்ளார்.
அப்பொழுது சக்தி வீட்டிலிருந்து கொண்டு வந்த ஆடைகள் மற்றும் பைகள் அனைத்தும் காட்டுக்குள் கிடந்ததை அவதானித்த ஜனனி கதறி அழுகின்றார்.

ஜனனியின் இந்த செயலை நபர் ஒருவர் காணொளியாக எடுத்து ராமசாமிக்கு அனுப்பியதுடன், அங்கு தான் இந்த பெண் வருகின்றார் என்ற தகவலையும் கொடுத்துள்ளார்.
தற்போது ராமசாமி வேறு நெருக்கடியை ஜனனியிடம் வைக்கின்றார். சக்தியின் நிலையும் மிகவும் மோசமானதாக இருக்கின்றது.
அவரை அடக்கம் செய்வதற்கு பெட்டியையும் ஏற்பாடு செய்துள்ள நிலையில், இதிலுள்ள ஆக்சிஜனை கண்ட்ரோல் செய்வதற்கான ஆப்ஷனையும் தனது போனில் வாங்கி வைத்துள்ளார் ராமசாமி.
கடைசி நொடியில் ராணா வருவார் என்றும் சக்தி ஜனனி இருவரையும் காப்பாற்றி குணசேகரனின் கொட்டத்தை அடக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |