Ethirneechal: போலிசாருக்கு பயந்து தலைமறைவாகிய குணசேகரன்... ஜனனியிடம் சிக்குவாரா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்தியைக் காப்பாற்றிய நிலையில், குணசேகரனை தேடி போலிசார் வந்ததால் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் அறிவுக்கரசி இருவரால் சக்தி மரணத்தின் விழிம்பு வரை சென்று வந்துள்ளார்.
சக்தியின் உயிரை ஒருவழியாக போராடி மீட்ட ஜனனி குணசேகரனைக் குறித்து நீதிபதியிடம் கூறியுள்ளார். நீதிபதி குணசேகரனையும், அவரது தம்பியையும் பிடிப்பதற்கு போலிசாரை அனுப்பியுள்ளனர்.

ஆனால் குணசேகரனுக்கு இந்த விடயம் முன்கூட்டியே தெரிந்து தம்பிகளுடன் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகின்றார். மேலும் வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரனை எவ்வளவோ தடுத்தும் எதுவும் நடக்காமல் போயுள்ளது.
குணசேகரனும் தம்பிகளும் காரில் கிளம்பியுள்ள நிலையில், ஜனனிக்கு போன் செய்து விஷயத்தையும் கூறியுள்ளனர். அடுத்த ஜனனியின் நடவடிக்கை என்ன என்பதும், குணசேகரன் போலிசாரிடம் சிக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |