Ethirneechal: எதுவுமே வேண்டாம்.. தர்ஷனை அடக்கிய அன்புக்கரசி- மொத்தமாக முடியப்போகும் ஜனனியின் திட்டம்
புது புது திட்டங்களுடன் காத்திருக்கும் ஜனனியின் தர்ஷன்- பார்கவி திட்டம் நடக்காமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுக்க, அதற்கு சக்தி வைத்தியம் செய்து தர்ஷனனை சுய நினைவுக்கு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக உயிரை பணயம் வைத்திருக்கும் பார்கவி, ஜீவானந்தம் உதவியுடன் மண்டபத்திற்கு அருகில் வந்து விடுகிறார்.
அசந்த நேரத்தில் மருமகள்கள் தன்னுடைய திட்டத்தை நடத்தி விடுவார்கள் என குணசேகரன், கதிர் இருவரும் உஷாராகவே இருக்கிறார்கள்.
வெறிக் கொண்டு காத்திருக்கும் குணசேகரன்
இது ஒரு புறம் இருக்கையில், நலங்கை பூர்த்தி தர்ஷன் வெளியில் செல்லலாம் என பார்க்கும் பொழுது அன்புக்கரசி தடுக்கிறார். இதற்கு கதிரும் உடந்தையாக இருக்கிறார்.
ஜீவானந்தம், ஜனனி திட்டத்தின்படி தர்ஷன் வெளியில் வந்தால் பார்கவியுடன் திருமணம் செய்து வைத்துவிடலாம் என கணிக்கிறார்.
இதற்கு மருமகள்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதே சமயத்தை இந்த திருமணத்தை வைத்து மருமகள்களின் உயிரை காவு வாங்கி விடலாம் என குணசேகரன் வெறிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |