Ethirneechal: ஆக்ரேஷமாக வந்த அறிவுக்கரசியை துவம்சம் செய்த ஜனனி... பரபரப்பான ப்ரொமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியைக் காப்பாற்றிவிட்டு வீட்டிற்கு வந்த ஜனனி தன்னை தாக்க வந்த அறிவுக்கரசியினை அடித்து துவம்சம் செய்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகத்தில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. வீட்டில் மருமகள்களை ஆட்டி வைத்த குணசேகரனுக்கு தற்போது ஆப்பு வைக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.
அதாவது தேவகி குறித்த உண்மையைக் கண்டறிந்து வீட்டிற்கு வந்த சக்தியை, வரும் வழியிலேயே கடத்தி ராமசாமியை சித்ரவதை செய்ய கூறியுள்ளார்.

சக்தியின் நிலையினை ஜனனியிடம் காட்டி மிரட்டியதோடு, ஜனனியை காரணம் காட்டி வீட்டு பெண்களை அடக்கி வைத்தார்.
ஒருவழியாக சக்தியை மீட்ட ஜனனி குணசேகரனை குறித்து நீதிபதியிடம் புகாரும் கொடுத்துள்ளார். இதனால் போலிசாருக்கு பயந்து குணசேகரன் தலைமறைவாகிய நிலையில், ஜனனி மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளார்.
ஜனனியை தாக்குவதற்கு அரிவாளுடன் வந்த அறிவுக்கரசியினை அடித்து துவம்சம் செய்து ஜனனி மாஸ் காட்டியுள்ளார். மேலும் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளும் அடைக்கலம் இல்லாமல் காரில் சுற்றுகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |