Ethirneechal: கொந்தளிப்பில் ஜனனி.... உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனின் ஹனிமூன் பிளானை தடுத்த அன்புவை அழைத்துக்கொண்டு வெளியே செல்லுமாறு முல்லையை மிரட்டியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. வீட்டு பெண்கள் குணசேகரனுக்கு எதிராக செயல்பட்டு அவரது திட்டத்தை முறியடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தர்ஷன் பார்கவி திருமணத்தினை மாஸாக நடத்தி முடித்துள்ளார் ஜனனி. இந்நிலையில் குணசேகரனைக் குறித்த சில ஆதாரங்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.

இதனால் உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு தனுஷ்கோடி சென்றுள்ளார். ஆனால் இந்த விடயம் குணசேகரனுக்கு தெரியவரவே சக்தியை கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பி வைத்துள்ளார்.
குணசேகரனின் ஆட்கள் சக்தியை சுற்றிவளைத்து நிற்கும் நிலையில், சக்தி தன்னை காப்பாற்றிக் கொள்வாரா? அல்லது வேறு யாரும் அவரை காப்பாற்றுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மற்றொரு புறம் தர்ஷன், பார்கவி இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அன்புக்கரசி தனது வில்லத்தனத்தினால் அதனை முறியடித்துள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜனனி முல்லையிடம் உனது தங்கையை கூட்டிக்கொண்டு போ என்று கோபத்தில் சட்டையைப் பிடித்துக் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |