Ethirneechal: சுயரூபத்தைக் காட்டிய போலிஸ்... ஆடிப்போய் நிற்கும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதைக் கண்டறிய புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார். அவரின் நிலைக்கு குணசேகரன் தான் காரணம் என்று வீட்டுப்பெண்கள் கண்டிப்பாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே வழக்கினை விசாரித்துக் கொண்டிருந்த கொற்றவை வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், புதிய காவலரை இவ்வழக்கினை விசாரிக்க நியமித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த போலிசார் மருத்துவர்கள் அறிக்கையில் கூறியதை குணசேகரனிடம் கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தருணத்தில் அறிவுக்கரசியுடன் சுற்றித்திரிந்த அவரது அண்ணனையும், கரிகாலனையும் போலிசார் பிளந்து எடுத்துள்ளனர்.
மேலும் அவர்களைக் காட்டி குணசேகரன் மற்றும் கதிர் உட்பட அனைவரையும் எச்சரித்துவிட்டும் செல்கின்றனர். பின்பு மருத்துவமனையில் விசாரணையை தொடர்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
